வட்டவளையில் வேன் விபத்து - 9 பேர் காயம்

0


(.கிஷாந்தன்)

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் காலி பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

18.04.2018 அன்று வியாழக்கிமை விடியற்காலை 5.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனில் 9 பேர் பயணித்துள்ளதாகவும், 9 பேரும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, ஐவர் தொடர்ந்தும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலி பிரதேசத்தில் மரண வீடொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் அட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

காயமுற்ற 9 பேரில் மூன்று பெண்கள் அடங்குவதாகவும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top