வௌ்ளை தேசியவாதம் மற்றும் பிரிவனைவாத பதிவுகளை பேஸ்புக்கில் இருந்து தடை செய்யப் போவதாக பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார்,
இன்ஸ்டக்ராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து இவ்வாறான பதிவுகளை இனி நீக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்,
அத்துடன் தீவிர வலதுசாரி கருத்துக்களை பகிர முற்படும் அல்லது அது குறித்து தேடுவோரின் தகவல்கள் அவற்று எதிராய் போராடும் நிறுவனங்களுக்கு அனுப்பபடும் எனவும் பேஸ்புக் கூறுகின்றது.
நியூசிலாந்தில் நடத்தப்பட்ட தாக்குதல் நேரலையாக பேஸ்புக்கில் ஔிபரப்பு செய்யப்பட்டமையையடுத்து எழுந்த விமர்சனங்களாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,

