மன்னாரில் முதியவரின் அசிங்கமான செயற்பாடு!

0

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை பகுதியில் சுமார் 7 வயதுடைய வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டநிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் வைத்தியசாலை உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முதியவர் ஒருவரை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த முதியவர் சில தினங்களுக்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிய வருகின்றது.
இதனையடுத்து சிறுமி தனது பெற்றோருக்கு இந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்தே முதியவரை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top