கள்ளச்சாராய விற்பனை நிலையம் முற்றுகை; பெண் கைது

0

2,800 லீற்றர் கள்ளச் சாராயம் மீட்பு
சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் விற்பனை மத்திய நிலையமொன்றினை, ஹப்புத்தளை பொலிசார் கண்டுபிடித்ததோடு, மேற்படி மத்திய நிலையத்தின் பொறுப்பாளரென்று சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரையும், கைது செய்துள்ளனர்.

ஹப்புத்தளைப் பகுதியின் தங்கமலை பெருந்தோட்ட மத்தியிலேயே, மேற்படி மத்திய நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர தயாரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்து, பொலிசார் தங்கமலை பெருந்தோட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டபோதே, மேற்படி கள்ளச் சாரயம் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 2,800 லீற்றர் இரண்டாயிரத்து எண்ணூறு லீட்டர் சட்டவிரோத கள்ளச்சாரயம் கொண்ட பீப்பாக்கள் மற்றும் அதனை தயாரிப்பதற்கான “ஸ்பீறிட்” மூலப்பொருட்கள் உள்ளிட்ட பெருந்தொகையிலான உபகரணத்தொகுதிகள் ஆகியனவற்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை மத்திய நிலையப் பொறுப்பாளரென்று சந்தேகிக்கப்படும் தங்கமலை பெருந்தோட்டப் பெண் ஒருவரையும், பொலிசார் கைது செய்தனர்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top