காஸாவில் போர்நிறுத்தம் அமலான பிறகும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சண்டை நடைபெற்றது. ஒருவருக்கொருவர் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் போர்நிறுத்தம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்தவர், "ஹமாஸுடன் மிகவும் அமைதியான சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். உங்களுக்குத் தெரியும், அவர்கள் மிகவும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அவர்களின் தலைமை இதில் ஈடுபடாமல் இருக்கலாம் என்று நினைக்கிறோம். பின்னர், உங்களுக்குத் தெரியும், சில கிளர்ச்சியாளர்கள் காஸாவில் இருக்கின்றனர். எப்படியிருந்தாலும் அது சரியாகக் கையாளப்படும். கடுமையாகக் கையாளப்படும், ஆனால் முறையாகக் கையாளப்படும்." எனத் தெரிவித்தார்

