கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நடுநிலையாக உடனுக்குடன் செய்திகளை வழங்கிவரும் எமது Today Ceylon ஊடக வலையமைப்பிற்கு ஊடக செயற்பாடுகளையும் சமூக சேவைகளையும் செய்துவரும் எமது ஊடகவலை அமைப்பினுடைய நிறைவேற்றுப் பணிப்பாளர் தேசமானிய தேச கீர்த்தி எஸ்.எம்.சன்சீர் அவர்களது அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி சிறந்த சமூக ஊடக விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேசமானிய தேச கீர்த்தி எஸ்.எம்.சன்சீர் அவர்களிடம் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வருமான கௌரவ. ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களால் குறித்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளரும் பேரவைச் செயலாளருமான கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் மாற்றத்திற்கான சர்வதேச பணிப்பாளர் ரிஷாத் சரீப் . அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.உவைஸ். திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சசிகுமார் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து கெளரவம் வழங்கப்பட்டது.