கொழும்பு - மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேனமுல்ல பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 28 கிராம் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாதம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.