சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (24) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் திருகோணமலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுயைட இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 340 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.