மல்வத்தையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!
சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த கசிப்பையும் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (18) சனிக்கிழமை இரவு 09.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை, திருவள்ளுவர் புரம் பகுதியில் கசிப்புடன் நேற்று சனிக்கிழமை (18) இரவு 09.30 மணியளவில் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 45 வயதுடைய சந்தேக நபர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 7,500 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் பதில் பொறுப்பதிகாரி டி.கே.நந்தன தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.