மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது - ஆபாச வீடியோக்களை விற்று வருமானம் ஈட்டியதாக புகார்

0

 தமிழ்நாடு, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.  ஜனவரி 17 அன்று, வெளியான நாளேடுகளில் இடம் பெற்றுள்ள முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ஜனவரி 16-ஆம் தேதியன்று, தங்களின் மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, சென்னை காவல்துறை தெரிவித்துள்ளதாக, 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் நாடு செய்திகள்

பட மூலாதாரம்,today ceylon media

குழந்தைகள் நலக்குழு அளித்தப் புகாரின் அடிப்படையில், விசாரணையை நடத்திய காவல்துறையினர், அந்த பெற்றோரை கண்டுபிடித்துள்ளனர். அப்பெண்ணின் தந்தையிடம் இருந்து கைப்பற்றிய செல்போனில், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த பெண் குழந்தைகளின் அனுமதியின்றி எடுக்கப்பட்டது என்றும், அந்த நபருடைய மகளின் வீடியோக்களும் அதில் இருந்தது என்றும் காவல்துறையினர் விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை ஆன்லைனில் விற்று அதன் மூலம் வருமானம் ஈட்டியுள்ளார் அந்த நபர். மேலும், இந்த விற்பனைக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததை கண்டறிந்துள்ளனர் காவல்துறையினர்.

தற்போது இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் மகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top