சொந்த மக்களிடமிருந்து சவாலை எதிர்கொள்ளும் ஜே.வி.பி

0

ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி, தற்போது மிகக் குறுகிய காலத்திற்குள் அதன் சொந்த மக்களிடமிருந்து ஒரு சவாலை எதிர்கொள்கிறது என்று, சர்வஜன பலய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆளும் கட்சி இப்போது எல்லாவற்றையும் கட்டுக்கதைகளால் மூடி மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வஜன பலய கூட்டணியின் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவுகளின் விலை

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரின் உரையைக் குறிப்பிட்டு காட்டிய அவர் ஒருவருக்கு மட்டுமே அரச வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

சொந்த மக்களிடமிருந்து சவாலை எதிர்கொள்ளும் ஜே.வி.பி | Dilith Jayaweera Comments On Jvp

ஆனால் அனைத்து வாகனங்களும் மாதிவெலவில் (நாடாளுமன்ற வீட்டு வளாகம்) இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமரா கூறுகிறார். அதேநேரம் அவர்கள் வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு வருவதை தாமும் பார்த்திருப்பதாக திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலையை உயர்த்தும் முடிவு குறித்து கருத்துரைத்த அவர், ஒரு சிறிய சாலையோரக் கடையில் இருந்து மதிய உணவு பொதிகளை வாங்கினாலும், ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்க்கு மூன்று வேளை சாப்பிட முடியாது என்று கூறினார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top