வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் பிறப்புறுப்பில் கத்தியை சொருகிக்கொண்ட பயங்கரம்!

0


 மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆட்டோ ஓட்டுநரால் 20 வயது பெண் பாலியல் வன்கொடுமை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொலிசாரின் கூற்றுப்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மோசமான நிலையில் விகார் நகர் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் இருந்த அவரை  பொலிசார் மீட்டனர்.

தான் பலாத்காரம் செய்யப்பட்டதை வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்று பயந்து அந்த பெண், அறுவை சிகிச்சை கத்தியை வாங்கி தனது பிறப்புறுப்பில் சொருகியுள்ளார். மேலும் கற்களையும் அதனோடு திணித்துள்ளார்.

அருகிலுள்ள ரெயில் நிலையம் வரை தட்டுத்தடுமாறி சென்ற அவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியெடுத்த நிலையில் இறுதியில் பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார். பொலிசார் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். அவரது பிறப்புறுப்பில் இருந்து கத்தியும், கற்களும் அகற்றப்பட்டன.

அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை பொலிசார் கைது செய்தனர். அந்த இளம் பெண் தனது குடும்பத்துடன் நலசோபராவில் வசிக்கிறார். ஆனால் விசாரித்தபோது தான் ஒரு அனாதை என்று அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

மேலும் பெண்ணின் தந்தை பேசுகையில், ஏற்கனேவே 2023 ஆம் ஆண்டு மும்பையின் நிர்மல் நகர் மற்றும் சிவாஜி நகரில் தனது மகள் தொடர்பான இரண்டு வன்கொடுமை முறைப்பாடுகள் உள்ளதாக பொலிசிடம் கூறியுள்ளார்.

ஆனால் கடை வியாபாரியான பெண்ணின் தந்தை பெண்ணையும், அவளது தாயையும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் பொலிசார் கருதுகின்றனர்.

ஆரம்பத்தில், அந்த பெண் தான் ஒரு அனாதை என்றும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வந்ததாகவும், அங்கு தனது மாமாவுடன் வசித்து வந்ததாகவும் காவல்துறையினரிடம் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை அவருடன் மும்பை சென்றதாக அவர் கூறினார். இருப்பினும், மேலதிக விசாரணையில், செவ்வாய்க்கிழமையன்று அந்த பெண் தனது வீட்டில் இருந்து தப்பி வந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணின் கூற்றுப்படி, அவர் ரயில் நிலையத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை சந்தித்து தனது துயரமான குடும்ப சூழ்நிலை மற்றும் தற்கொலை எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

சாரதி அனுதாபமாக பேசி, வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு பதிலாக 12 கிமீ தொலைவில் உள்ள அர்னாலா கடற்கரைக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top