நாட்டை விட்டு வெளியேறும் பெருந்தொகை மக்கள்!

 


இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign Employment )தெரிவித்துள்ளது.


இதேவேளை பெரும்பாலான இலங்கையர்கள் குவைத்(Kuwait) நாட்டிற்கு தொழிலுக்காக சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


தொழிலாளர்களின் எண்ணிக்கை

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39,900 எனவும், பெண்கள் 34,599 பேர் என்பதும் தெரியவந்துள்ளது.


இந்த புள்ளிவிபரங்களின்படி, இலங்கையர்கள் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா(South Korea), இஸ்ரேல்(Israel) மற்றும் ஜப்பான்(Japan)போன்ற நாடுகளில் தொழில் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.


இதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் தென் கொரியாவிற்கு 2,374 பேரும், இஸ்ரேலுக்கு 2,114 பேரும், ருமேனியாவிற்கு 1,899 பேரும் ஜப்பானுக்கு 1,947 பேரும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section