சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வைத்திய நிருவாக சேவை அதிகாரிகளின் பதிவியுயர்வு மற்றும் இடமாற்றக்கட்டளைக்கமைவான பட்டியலில் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்கள் சிரேஸ்ட தரத்திலான பணிப்பாளர் பதவிக்கு உள்வாங்கப்பட்டிருப்பதுடன் கல்முனை பிராந்திய சேவை பணிப்பாளர் பணிமனையை நிரந்தர சேவை நிலையமாகவும் பெற்றுள்ளார்
இதற்கமைவாக இன்று 2024.04.02 ஆம் திகதி தனது புதிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பணிப்பாளரை பிரிவுத்தலைவர்கள் பிரசன்னமாகி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்
ஊடகப்பிரிவு