ஜேர்மனியில் புலம்பெயர்தல் விதிகளில் செய்யப்பட உள்ள முக்கிய மாற்றங்கள்

 


ஜேர்மனியில் புலம்பெயர்தல் விதிகளில் முக்கிய சில மாற்றங்கள் இந்த மாதத்தில் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பரில், புலம்பெயர்தல் விதிகளில், புதிய திறன்மிகுப் பணியாளர் சட்டம், Blue Card பெற விண்ணப்பிப்பதற்கான ஊதிய வரம்பு குறைப்பு முதலான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


ஜேர்மனியில் பணி செய்ய வருவோருக்கு பெரிய தடையாக அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பெற்ற சான்றிதழ்கள் ஜேர்மனியில் அங்கீகரிக்கப்படுவதற்கான கடுமையான நடைமுறைகள் இருந்து வருகின்றது.



இதனால் சான்றிதழ்கள் அங்கீகாரம் பெற தாமதமாவதால், ஜேர்மனிக்கு வந்தோர் பணியில் இணைய தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, இனி பணியாளர்கள் தங்கள் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படும்வரை காத்திருக்காமல் ஜேர்மனியில் வாழவும் விரைந்து பணியில் இணையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


குறித்த மாற்றங்கள் மார்ச் மாதம் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இரண்டு ஆண்டுகளுக்குள் அல்லது 21 மாதங்களுக்குள் திறன்மிகுப் பணியாளர்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி, மருத்துவத் துறையில் பணியாற்றும் தகுதி பெற்ற செவிலியர் மற்றும் பிற பணியாளர்கள் ஜேர்மனியில் பணியில் இணைவது , குடும்ப மறு இணைப்பு விதிகள் என்பன எளிதாக்கப்படவுள்ளது.


மேலும், ஜேர்மனியில் தொழில் துவங்குவோருக்கு வசதிகள், சர்வதேச மாணவர்கள் பணி செய்ய கூடுதல் உரிமைகள், குறுகிய காலப் பணி செய்வோருக்கான விசாக்கள் என புலம்பெயர்வோருக்கு உதவும் வகையில் பல மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section