கலாநிதி றவூப் ஸெய்ன்
2003 மார்ச்சில் ஈராக் மீது அமெரிக்கா எனும் ஆணவம் கொண்ட நாடு ஆக்கிரமிப்பு யுத்தத்தினை மூட்டி ஒரு மில்லியன் ஈராக்கியர்களைக் குறிவைத்து கொலை செய்து கொண்டிருந்த போது சர்வதேச நீதி மன்றின் முன்னாள் தலைவரும் இலங்கையைச்சேர்ந்த சட்டத்துறை ஜாம்பவான்களில் ஒருவருமான கிறிஸ்தோபர் வீரமந்திரி அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அந்தப்போர் குறித்து ஓர் உரைத்தொடரை ஆற்றிவந்தார்.
எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அதில் ஒருநாள் அவரது முழு உரையும் ஏன் ஐ.நா.கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயங்களை அவர் அடுக்கிச்சென்றார். இன்றைய காஸா விவகாரத்தில் ஐ.நா.கைக்கொள்ளும் அதே விதமான இனச்சார்பையும் யூத ஸியோனிஸ சார்பையும் அமெரிக்கச் சார்பையும் பார்க்கும்போது அன்று அவர் சொன்ன UN must be dessolved என்ற வாக்கியம் என் நெஞ்சில் உரத்து ஒலிக்கிறது.
வடக்கு காஸாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா வின் வற்புறுத்தல் இஸ்ரேலின் நர வேட்டைக்கு வலிந்து இடம்கொடுக்கும் ஐ.நாவின் அப்பழுக்கற்ற இனவாதமே. அமெரிக்காவின் கையில் தொங்கும் இந்த பொம்மை சபை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக உலக நாடுகளின் மிகக்குறிப்பாக இஸ்லாமிய உலகின் விவகாரங்களைக் கையாண்ட விதத்திலிருந்து அதன் இனச்சார்பையும் அமெரிக்கச் சார்பையும் எளிதில் புரிந்துகொள்ளலாம். காஷ்மீர் ஃபலஸ்தீன் செச்னியா கொஸோவா பொஸ்னியா தாய்லாந்தின் பட்டானி மற்றும் பிலிப்பைன்ஸின் நறாதிவாத் யாலே விவகாரங்களைக் கையாண்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அது முஸ்லிம் எதிர் நிலைகளையே கையில் எடுத்தது.
கிழக்கு திமோர். தென் சூடான் விவகாரங்களில் அதன் அக்கறை மீண்டும் முஸ்லிம் எதிர் நிலைகளையே எடுக்க வைத்தது. கடந்த எண்பது ஆண்டுகால பாலஸ்தீன் விவகாரத்தில் ஐ.நா வின் பாதுகாப்புசபை எடுத்துவரும் முடிவுகளும் தீர்மானங்களும் இஸ்ரேல் ஆதாரவானவை. பலஸ்தீனர்களின் நிலங்களில் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றை யூதர்களுக்கு "உத்தியோகபூர்வமாகத் "தாரை வார்த்ததும் இந்த ஐ.நா தான்.
இதுவரை இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கெதிராக கொண்டுவரப்பட்ட 70 க்கு மேற்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா மட்டும் தனித்து நின்று தனது வீட்டோ ரத்ததிகாரத்தால் தடுத்து நிறுத்தியுள்ளது எனில் இதை விட வேடிக்கை வேறென்ன உள்ளது. இன்று காஸாவை ஆளரவமற்ற பாலைவனமாக்கத் துடிக்கும் ஸியோனிஸ காட்டு மிராண்டிகளுக்கு ஐ.நா.அங்கே களமமைக்கிறது . உலகின் சகல நாடுகளையும் சமத்துவமாக நடாத்தல் ஐ.நாவுக்கு சாத்தியமேயில்லை.அது நிதியாதரவளித்து செயலாளரையும் தனது சிபாரிசின் பெயரில் தெரிவு செய்யும் அமெரிக்காவின் பொம்மை சபை என்பது தெளிவாகி பல தசாப்தங்களாகிவிட்டன.
இனியும் அதன் நேர்மையிலும் நீதியிலும் நம்பிக்கை கொள்ள ஒன்றுமில்லை என்பதால் அது உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.
The United Nation is Zionism. It is the super government mentioned many times in the protocols of the learned elders of Zion promulgated between 1897 and 1905
Hentry Klein
A New York Jewish Lawyer in his famous book entitled
Zionism Rules the World p 78