கலாநிதி.றவூப் ஸெய்ன்
காஸா பெரும் அழிவைச்சந்திக்கின்றபோதும் இந்தப்போரின் இறுதித் தோல்வி இஸ்ரேலுக்குத்தான். ஆம் இஸ்ரேல் தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை .அதில் இம்மியளவும் ஐயமில்லை. ஒப்பீட்டு ரீதியில் மனித அழிவும் பொருளாதார அழிவும் காஸாவுக்குத்தான் என்றிருக்க எப்படி இஸ்ரேல் தோற்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பானது. இஸ்ரேல் வழமை போன்று பாலஸ்தீனர்களைக்கொன்றொழித்து தனது மிருக வெறியையும் இரத்தக்காட்டேறித்தனத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். மக்களைப் பட்டினியில் போட்டு இருளில் ஆழ்த்தி தண்ணீரை நிறுத்தி மருத்துவ வசதியை இல்லாமலாக்கி இன்னும் இன்னும் குரூரமான மிருகாபிமான வழிகளை எல்லாம் கையாண்டு பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கலாம்.
ஆனாலும் இஸ்ரேல் தோல்விதான்.
அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இஸ்ரேல் என்ற பிண்டம் சரிந்துவிட்டது. அந்த யூத சியோனிஸ அரக்கன் வீழ்ந்து விட்டான். 1948 மே 14 இல் பென் கூரியன் தலைமையில் இஸ்ரேல் என்ற பிண்டப் பிரமாண்டம் பிரகடனம் செய்யப்பட்டது முதல் 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இஸ்ரேல் இம்முறை தான் இப்படி ஒரு பெரிய தோல்வியைத்தழுவியுள்ளது. எங்களுக்குத் தெரியாமல் எங்கள் வானில் ஒரு குருவியும் பறக்கமுடியாது என்று எக்களித்துவந்த ஒரு பிண்டத்தின் மீது பெரசூட்டில் சென்று இறங்கியவர்கள் மொசாட்டுக்கு தண்ணி காட்டி விட்டனர். இது சாதாரணமானதொன்றல்ல. இஸ்ரேலிய யூதர்களின் உள்ளங்களில் இது உருவாக்கியுள்ள வெகுஜன உளவியல்;(Mass Psychology) ஸியோனிஸ்டுகளைப் பொறுத்தமட்டில் மிகப்பெரிய பின்னடைவாகும்.
பலஸ்தீனர்களின் தாக்குதல் அதுவும் ஏவுகணைத் தாக்குதல் தலைநகர் டெல் அவிவை ஊடறுதுத்து அழிவை உண்டு பண்ணியது இதுவே முதல் முறை.இது இஸ்ரேலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும். பென்கூரியன் விமான நிலையம் வரலாற்றில் முதன்முதலாக மூடப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேல் வீதிகள் நகரங்கள் அனைத்தும் யூதர்கள் இல்லாமல் வெறிச்சோடிக்கிட்க்கின்றன. இது இன்னொரு தோல்வியாகும்.எந்த உலக ஆதரவும் இல்லாத ஒரு ஆயுதக்குழு வரலாற்றில் என்றென்றைக்கும் தங்கள் வசம் வைத்திருக்காத ஆயுதங்களால் போராடுகின்றமை இஸ்ரேலின் வெகுஜன உளவியலில் பதிக்கும் செய்தி இஸ்ரேலின் தோல்விதான்.
இந்தப்போரின் முடிவில் இஸ்ரேலிய யூதர்களில் ஆகக்குறைந்தது அரைவாசி பேர் நாட்டை விட்டு தப்பியோட திட்டமிடுகின்ற
னர். ஒரு ஊடக கருத்துக்கணிப்பு இதை உறுதிசெய்துள்ளது. இஸ்ரேல் தமக்கு பாதுகாப்பான "நாடு" இல்லை என்பதை பாலஸ்தீனர்கள் யூதர்களுக்கு மட்டுமன்றி முழு உலக்த்துக்குமே உரத்துச்சொல்லி விட்டனர். இது இஸ்ரேலுக்குத் தோல்விதான். நெடன்யாஹூ எத்தனை பொய்களை கட்டவிழ்த்தாலும் இனி இந்த யூத வெகுஜன உளவியலை மாற்றுவது கடினமானது. மீண்டும் மரணபயம் கொண்ட யூதர்கள் அந்தப் பிண்டப்பிரமாண்டத்தை விட்டு ஓடுவது நிச்சயம்.
உலகம் முழுக்கவுள்ள ஏகாதிபத்திய காலனித்துவ கீழ்சாதி அரசுகள் தாம் உருவாக்கி வைத்தந்துள்ள இந்தப் புற்றை (cancer) பாம்புப் புற்றைப் பாதுகாக்க அணிதிண்டாலும் உலகளாவிய சிவில் சமூகம் பாலஸ்தீனர்களின் பக்கம்தான் நிற்கிறது இது இஸ்ரேலுககுத் தோல்விதான்.
ரஷ்யா சீனா என்பன பலஸ்தீனர்களுக்கான தனி நாடு உடனடியாக உருவாக்கப்படவேண்டும் என்று கோருவது இஸ்ரேலுக்குத் தோல்விதான்.
இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அறபுலக மரமண்டை மன்னர்களும் அவர்களுக்கு கூலிக்கு மாரடிக்கும் உள்ளுர் யூத புல்லுருவிகளும் பாலஸ்தீனர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தாலும் இது இஸ்ரேலின் தோல்விதான். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேல் அரசியல்ரீதியாகவும் ராஜதந்திர ரீதியிலும் கடும் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம். எல்லாவற்றுக்கும் முன்பதாக இஸ்ரேலிய ஆட்சி எந்திரமும் மக்களும் உளரீதியில் தோல்வியுற்று இன்றுடன் ஒரு வாரமாகி விட்டது.உண்மைகள் இறப்பதில்லை அவை புதைத்தாலும் முளைத்து விடுவது ஒரு வரலாற்றுப் பேருண்மை அல்லவா? இஸ்ரேல் தோற்றுத்தான் போயிற்று.