ஆறு உணவு பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

 


இந்த வருடம் அரிசி, பாசிப்பயறு, உழுந்து , குரக்கன், கௌபி, மற்றும் நிலக்கடலை போன்றவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யத் தேவையில்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


2022 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்கும் நடவடிக்கையின் மூலம் நாடு தற்போது நெல் மற்றும் ஏனைய உணவுப் பயிர்களில் தன்னிறைவு நிலையை அடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 24 இலட்சம் மெற்றிக் தொன் எனவும் கடந்த பருவகால அறுவடையின் மூலம் 27 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பாசிப்பயறின் ஆண்டுத் தேவை 20,000 மெட்ரிக் தொன், என்பதுடன் இந்த ஆண்டு 13,439 மெட்ரிக் தொன் பாசிப்பயறு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கௌபியின் வருடாந்தர தேவை 15,000 மெற்றிக் தொன் என்பதுடன் இந்நாட்டின் கௌபி உற்பத்தி 13,740 மெற்றிக் தொன் ஆகும்.

இந்நாட்டின் வருடாந்த உழுந்து தேவை 20,000 மெற்றிக் தொன் என்றாலும், இவ்வருடம் 17,866 மெற்றிக் தொன் உழுந்து அறுவடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிலக்கடலையின் வருடாந்தத் தேவை 35,000 மெட்ரிக் தொன் எனவும், இந்த ஆண்டு 36,498 மெட்ரிக் தொன் நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இந்நாட்டின் வருடாந்தத் குரக்கன்  தேவை 10,000 மெற்றிக் தொன் எனவும் இவ்வருடத்தில் அதன் அறுவடை 6408 மெற்றிக் தொன் எனவும் கூறப்படுகிறது.

இதன்படி, நாடு தற்போது அரிசி,  பாசிப்பயறு, குரக்கன், கௌபி, உளுந்து, நிலக்கடலை போன்றவற்றில் தன்னிறைவு அடைந்துள்ளதால், இவ்வருடம் மீண்டும் அந்த பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section