அஸ்வெசும' நலன்புரித்திட்டம் சமுர்த்திட்டத்தோடு இணைந்ததாக தொடர்ந்து கொண்டு செல்லப்படும். சமுர்த்தி வங்கியின் வாடிக்கையாளர்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

 


'அஸ்வெசும' நலன்புரித்திட்டம் சமுர்த்திட்டத்தோடு இணைந்ததாக தொடர்ந்து கொண்டு செல்லப்படும். சமுர்த்தி வங்கியின் வாடிக்கையாளர்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வங்கி முகாமையாளர்-ரீ.கே.றஹ்மத்துல்லா


அரசாங்கம் 'அஸ்வெசும' நலன்புரித்திட்டத்தை குறித்த காலப்பகுதிக்கு மட்டுமே நடைமுறைப் படுத்தவுள்ளது. இந்நிலையில் சமுர்த்தித் திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சமுர்த்தி வங்கியினூடாகவே முன்னெடுக்கப்படவுள்ளது.


 சமுர்த்தி வங்கியில் கணக்கு வைத்துள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கணக்குகள் தொடர்ந்தும் நடைமுறையில் பாதுகாப்புடன் என்றும் முன்னெடுக்கப்படும் என்பதில் வாடிக்கையாளர்கள் எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.



 அஸ்வெசும திட்டத்தினை அரசாங்கம் முன்னெடுத்துள்ள போதிலும் சமுர்த்தி திட்டத்தினூடான சேமிப்பு வசதிகள், குறைந்த வட்டி வீதத்திலான கடன் வசதிகள், ஏனைய சமூகப்பாதுகாப்பு உதவிகள், வாழ்வாதார உதவி திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் கல்விக்கான புலமைப் பரிசில் திட்டங்கள் போன்ற நன்மைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.



 சமுர்த்தி வங்கியில் உள்ள பணம் மீள திருப்பப் படும் என்றும், சமுர்த்தி வங்கிகள் மூடப்படும் என்ற வதந்திகளினால் அதன் வாடிக்கையாளர்கள்  வீண் சிரமங்களுக்கு மத்தியில் வங்கிகளுக்கு நாளாந்தம் வருகை தந்து சிரமம்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் வங்கியின் நாளாந்த நடடிக்கைகளை முன்னெடுப்பதில் பணியாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.



 எனவே, பொது மக்கள் வீண் வதந்திகளையும், பொய் பிரசாரங்களையும் நம்பி ஏமாறாமல் உங்களுக்கான கொடுக்கல், வாங்கள் நடவடிக்கைகள், மற்றும் வங்கியின் வழமையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section