மல்லி விதையின் மகிமை

 



சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரகப் பாதை நோய்கள் உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு மல்லி விதை உதவும். கொத்துமல்லி விதை வயிற்று வாயுவை அகற்றும் பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடியது. வாயுத் தொந்தரவு, உணவு எதுக்களித்தல், செரிமானம் இல்லாமை போன்றவற்றுக்கு மல்லி விதை சிறந்த மருந்து.


* Irritable Bowel Syndrome என்னும் கழிச்சல் நோய்க்கு ஓமமும் கொத்துமல்லியும் சேர்ந்த மருந்து குணம் தரும்.


வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கும் மல்லி விதையைச் சேர்க்கலாம்.


* மல்லி விதை நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்துவதிலும் நல்ல கொழுப்பைக் கூட்டு வதிலும் பயன் தரும்.


* கரப்பான், காளான்படை முதலான தோல் நோய்களுக்கும் மல்லி விதை எண்ணெய் தீர்வளிக்கிறது.


* தேநீர் தயாரிக்கும்போது மல்லி விதை, சுக்கு கொஞ்சம் சேர்த்துக் கொதிக்கவிட்டு அருந்தினால் வயோதிகத்தில் ஏற்படும் மலச்சிக்கலை நீக்கலாம். ‘மல்லி விதைத் தேநீர்’ குடலின் தசை இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தணிக்கிறது.


* சுக்கு, தனியா, பனைவெல்லம் சேர்ந்த கஷாயத்தை வாரம் ஒரு முறை குடிப்பது அஜீரணம் ஏற்படாதிருக்க உதவும்.


* மல்லி விதையில் உள்ள 85 விதமான மண மூட்டும் எண்ணெய்களில் 26 வகை எண்ணெய்கள் மருத்துவக் குணமுள்ளவை. ‘லினாலூல்’, ‘ஜெரானில் அசிடேட்’ ஆகிய மணமூட்டிகள்தான் மல்லி விதையின் மருத் துவத் தன்மைக்குக் காரணங்கள். இவையே உடல் செல்களைப் பாதுகாக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையைத் தருகின்றன.


அதனால் அடுத்த முறை சாம்பாரோ, ரசமோ, வற்றல் குழம்போ வைக்கும்போது மறக்காமல் மல்லி விதையைச் சேருங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section