Ajith: விடாமுயற்சி படத்திற்காக தன் கெட்டப்பை டோட்டலாக மாற்றி வரும் அஜித்..ஹாலிவுட் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் AK

 



விடாமுயற்சி படத்தின் லுக் டெஸ்ட்டிற்காக அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் லண்டனுக்கு சென்றுள்ளார். இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள அஜித்தின் ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. தொடர்ந்து இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்து முடித்த அஜித் தற்போது மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக இணைகிறார்.


இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. பொதுவாக மகிழ் திருமேனியின் படங்கள் என்றாலே தரமாக இருக்கும். எனவே அஜித்தை வைத்தும் அவர் ஒரு தரமான படத்தை கொடுப்பார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.


இந்நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் துவங்கவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.


இந்நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் துவங்கவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.


அதன் படி இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக அஜித் மற்றும் மகிழ் திருமேனி லண்டனுக்கு சென்றுள்ளனர். அங்கு அஜித்திற்கு லுக் டெஸ்ட் நடத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக அஜித் தன் படங்களில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலேயே நடித்து வருகின்றார். எனவே விடாமுயற்சி படத்தில் அஜித் தன் லுக்கை முற்றிலும் மாற்ற இருக்கிறாராம்.


அதன் காரணமாகவே லுக் டெஸ்ட்டிற்காக லண்டனுக்கு சென்றுள்ளார் அஜித். இதையடுத்து தற்போது வெளியான அஜித்தின் ஒரு புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதில் அஜித் செம ஸ்டைலாக லைட்டான தாடி மீசையுடன் இருக்கின்றார். ஒரு ஹாலிவுட் ஹீரோவைபோல அஜித் அந்த புகைப்படத்தில் காட்சியளிக்கின்றார்.


ஆனால் இந்த புகைப்படத்தில் அஜித் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலேயே இருக்கின்றார். விரைவில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலிருந்து அஜித் செம மாடனாக மாறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகும் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என தகவல்கள் வந்த நிலையில் தற்போது அஜித்தின் கெட்டப்பும் ஹாலிவுட் ஹீரோவைபோல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section