மஜீட். ARM
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் வழிகாட்டலில்,
'வாழ்நாள் முழுவதும் - எழுத்தே நண்பன்' எனும் தொனிப்பொருளில் கதிரவன் கலைக்கழகக் கலைஞர்களால் வீதி நாடகமொன்று இன்று (21) அமீர் அலி பொது நூலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்தையும் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட், உள்ளூராட்சி உதவியாளர் சல்மா எம். சதாத், அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. பஸ்மிலா, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், நூலகர் ஏ.ஆர்.எம். இல்யாஸ், நூலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











