எதிர்வரும் ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் வழமைபோல் இயங்கும் – அமைச்சு அறிவிப்பு

0


எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமைபோல் திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக, குறித்த நாட்களில் அரச ஊழியர்கள் இணையவழி (Online) முறையில் பணியாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பொதுமக்களுக்கான சேவைகள் தடையின்றியும் வினைத்திறனுடனும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அந்தத் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளது.


இதனையடுத்து, அனைத்து அரச அலுவலகங்களும் குறித்த தினங்களில் வழமைபோன்று இயங்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top