2,400 கிமீ அப்பால் இருந்த புற்றுநோயாளிக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்த இந்திய வம்சாவளி மருத்துவர்

0

இந்த அறுவை சிகிச்சை டூமாய் ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்தியது

லண்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், 2,400 கி.மீ தொலைவில் ஜிப்ரால்டரில் உள்ள ஒரு நோயாளிக்கு பிரிட்டனின் முதல் நீண்ட தூர ரோபோ அறுவை சிகிச்சையைச் செய்ததாகக் கூறுகிறார்.

முன்னணி ரோபோடிக் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ப்ரோகர் தாஸ்குப்தா, பால் பக்ஸ்டனுக்கு ப்ராஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது "தான் அங்கே இருப்பதைப் போலவே உணர்ந்ததாக" கூறினார்.

ஆய்வில் பங்கேற்று மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறுவது தனக்கு எளிதான முடிவாகவே இருந்ததாக, 62 வயதாகும் புற்றுநோய் நோயாளியான பால் பக்ஸ்டன் கூறினார்.

தொலைதூர ரோபோடிக் அறுவை சிகிச்சை எதிர்கால நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயணம் செய்வதில் உள்ள "பெருமளவு சிரமம் மற்றும் செலவை" தவிர்க்க உதவும் என்றும், தொலைதூர இடங்களில் உள்ள மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவையை வழங்க உதவும் என்றும் நம்பப்படுகிறது.

பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொலைதூர அறுவை சிகிச்சையில் முக்கியமான முன்னேற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில், அவர்கள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் 4,000 மைல் தொலைவில் இருந்து, அறிவியல் ஆராய்ச்சிக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட ஒருவரின் உடலில், ரோபோடிக் பக்கவாத சிகிச்சையைச் செய்தனர். இது நீண்டதூர அறுவை சிகிச்சை தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் என்பதைக் காட்டியது.

சோமர்செட்டில் உள்ள பர்ன்ஹாம் ஆன் சீயை சேர்ந்த பக்ஸ்டன், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்ரால்டருக்கு குடிபெயர்ந்தார்.

பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசமான ஜிப்ரால்டரில், யூரோபோர்ட்டில் உள்ள செயின்ட் பெர்னார்ட்ஸ் என்ற ஒரேயொரு மருத்துவமனை மட்டுமே உள்ளது. அதாவது மிகவும் சிக்கலான மருத்துவத் தேவைகளைக் கொண்ட குடியிருப்புவாசிகள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். பொதுவாக தகுதி இருப்பின், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையை அணுகுவார்கள்.

கிறிஸ்துமசுக்கு பிறகு ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு பக்ஸ்டன் தேசிய சுகாதார சேவையின் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்த்தார். ஆனால், ஒரு சோதனையின் ஓர் அங்கமாகத் தொலைதூர சிகிச்சையை மேற்கொள்ளும் முதல் நோயாளியாகும் வாய்ப்பை பெற்றதால் அதைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறினார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top