2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிவருகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித் தலைவர் அஜிங்கே ரஹானே 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.
இந்நிலையில் 221 என்ற வெற்றியிலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி பதிலுக்கு துடுப்பாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

