இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை குழாமில் பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
