இன்றிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் தமிழ் மொழியில் பதிவு வைக்கலாம். (பிறப்பு_மற்றும்_இறப்பு )

0



 👉கௌரவ இறக்காமம் பிரதேச சபையினுடைய #உதவித்_தவிசாளரும்_சட்டத்தரணியுமான #கே.#எல்.#சமீம் அவர்களுடைய விடாமுயற்சியின் பலனாக எமது பொதுமக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்கு இன்று முதல் முதல் அனுமதி.


 அம்பாறை பொது வைத்தியசாலையில் மிறக்கப்படும் குழந்தைகளுக்கு தமிழ் மொழி மூலம் பிறப்பு பதிவு வைப்பதற்கு அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.


இதற்கான அனுமதிக் கடிதம் நேற்று அம்பாறை GA அவர்களால்  வழங்கப்பட்டது. இவ்விடயம் அம்பாறை பொது வைத்தியசாலை பிறப்பு இறப்பு பதிவாளர் மற்றும் அம்பாறை பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளருக்கும்  GA அவர்களால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது ஒரு நிரந்தர சேவையாகும்.


 கடந்த காலங்களில் சிங்கள மொழியில் பதிவுகள் வைக்கப்பட்டதால் எழுத்து பிழைகள்  ஏற்பட்டு மக்கள் பல சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர். (குறிப்பாக இறக்காமம் பிரதேச மக்கள், )


இதனைக் கருத்திற் கொண்டு கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இதனை ஒரு தேர்தல்  விஞ்ஞாபானமாக வெளியிட்டு  மக்கள் அளித்த 500 வாக்குகளை வைத்து பிரதேச சபை உறுப்பினாகி இதனை இறக்காமம் DCCற்கு கொண்டு சென்று சொல்லை செயலாக்கி காட்டிய கௌரவ உதவித் தவிசாளர் சட்டத்தரணி கே.எல்.சமீம் அவர்களுக்கு எமது ஊடகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .


.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top