மேற்கு ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது இன்றையதினம்(6) ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ஒப்பீட்டளவில் ஆழமற்றது என்றும், சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு ஜப்பானில் உள்ள ஷிமானே மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மாட்சுவே மற்றும் யசுகி நகரங்கள் மற்றும் டோட்டோரி மாகாணத்தின் அருகிலுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
பாதிப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
