ஐஸ் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப் படையினரினால் ஒருவர் கைது!

0


தில்சாத் பர்வீஸ் 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பௌஸ்மாவத்தை வீதியில் மலையார் வீதிக்கு திரும்பும் சந்தியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (18) வியாழக்கிழமை மாலை வேளையில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.



கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

மல் 14 வீதி, புளக் ஜே மேற்கு 01 பகுதியைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் தலைமையிலான விசேட  அதிரடிப்படை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top