வெளிநாட்டில் இருந்து வந்த பிள்ளையானின் சகா அதிரடியாக கைது

0

குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான நாட்டுக்கு திரிப்பிஅ நிலையில் கைதாகியுள்ளார்.

அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன், நாட்டிற்கு திரும்பிய நான்கு நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த பிள்ளையானின் சகா அதிரடியாக கைது | Pillayan Friend Arrested Return Country

முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் கடத்தல்

மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை (17) காலை, கொழும்பில் இருந்து சென்ற குற்றவிசாரணைப் பிரிவு (சிஐடி) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்) கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி சிஐடியால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக, அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் பிள்ளையானின் சகாவான கிருஷ்ணபிள்ளை சுமனை சிஐடியினர் கைது செய்து , விசாரணையின் பின்னர் மாலையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top