இது பற்றி தெரியவருவதாவது:-
மட்டக்களப்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்புப் பிரிவுப் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் எனக் கூறப்படும் ஒருவர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இவர், பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் மொழிபெயர்ப்பாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரின் கணவர் என்றும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சுவேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானார்.
இருவரும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட வியாபாரியான பிள்ளையானின் மொழிபெயர்ப்பாளரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதித்தார்.
250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சுத் தொழிலாளியைப் பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

