6 வயது பாடசாலை மாணவன் மீது தாக்குதல் ; ஹக்மனையில் சம்பவம்!

0

 



மாத்தறையில் ஹக்மனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் 6 வயதுடைய பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக ஹக்மனை பொலிஸார் தெரிவித்தனர்.

முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

6 வயதுடைய பாடசாலை மாணவன் தினமும் தனது தந்தையுடன் பாடசாலை வீதிக்கு அருகில் உள்ள விகாரைக்கு சென்று பின்னர் அங்கிருந்து 15 வயதுடைய பாடசாலை மாணவனுடன் பாடசாலைக்கு செல்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவத்தன்று,  6 வயதுடைய பாடசாலை மாணவன்  வழமைப்போல தனது தந்தையுடன் பாடசாலை வீதிக்கு அருகில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.

பின்னர் தந்தை காயமடைந்த பாடசாலை மாணவனை விகாரையில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதன்போது 15 வயதுடைய பாடசாலை மாணவன் 6 வயதுடைய பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திவிட்டு அவரை விகாரைக்கு பின்னால் அமைந்துள்ள காணியில் விட்டுச் சென்றுள்ளார்

இதனையடுத்து 6 வயதுடைய பாடசாலை மாணவனின் தந்தை மகனை காணவில்லை என ஹக்மனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். 

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாடசாலை வீதிக்கு அருகில் உள்ள விகாரையின் பின்னர் அமைந்துள்ள காணியில் காயமடைந்த நிலையில் மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான 15 வயதுடைய பாடசாலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் ஹக்மனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top