ஒரே நாளில் 4,640 பேர் கைது

0

 நாடளாவிய ரீதியில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,640 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே நாளில் 4,640 பேர் கைது | 4 640 People Arrested In A Single Day Srilanka

திறந்த பிடியாணை உத்தரவு

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 658 பேரும், சந்தேகத்தின் பேரில் 19 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 245 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 164 பேரும் கைதாகியுள்ளனர்.

அதோடு மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 52 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 16 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3486 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top