வெள்ளவத்தையில் ஆயுர்வேத ஸ்பா என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி மீது பொலிஸார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தி, ஆறு வெளிநாட்டு பெண்களை கைது செய்தனர்.
புலனாய்வு தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தையில் உள்ள ஸ்டேஷன் வீதியில் அமைந்திருந்த விபச்சார விடுதியில் பொலிஸார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், அனைவரும் வெளிநாட்டு குடிமக்களாகவும் உள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

