ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: அமெரிக்காவையே அச்சுறுத்தும் ரஷ்ய ஏவுகணை - சீனா என்ன செய்கிறது?

11 மீட்டர் நீளமும் 15 டன் எடையும் கொண்ட ஊசி-கூர்மையான உருவம் ஒவ்வொன்றிலும் "டி.எஃப்-17" (DF-17) என்ற எழுத்துகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
சீனா அப்போதுதான் தனது டாங்ஃபெங் ஹைபர்சோனிக் ஏவுகணை இருப்பை உலகிற்கு அறிவித்தது.
அது அக்டோபர் 1, 2019 அன்று தேசிய தின அணிவகுப்பில் நடந்தது. இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்தது, ஆனால் அதன் பின்னர் சீனா அவற்றை மேம்படுத்துவதில் முன்னேறியுள்ளது.
அவை வேகமாக செல்லக்கூடியவை, அவற்றை இலகுவாக இயக்கலாம் - ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் அவை, வலிமையான ஆயுதங்கள் என்பதால் போர்கள் நடத்தப்படும் முறையை மாற்றக்கூடும்
