பாகிஸ்தான் – பைசலாபாத்தில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய பாரிய சோதனையில் கைது செய்யப்பட்ட 149 பேரில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவர் என்று அந்நாட்டின் தேசிய சைபர் குற்ற புலனாய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், போன்சி திட்டங்கள் மற்றும் போலி முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்ட ஒரு பெரிய அளவிலான நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டது என்று NCCIA அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், 8 நைஜீரியர்கள், 4 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், 6 வங்கதேசத்தினர், 2 மியான்மர் நாட்டவர்கள், ஒரு ஜிம்பாப்வே நாட்டவர் மற்றும் 2 இலங்கையர்கள் அடங்குவர். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.