கடிதம் அனுப்பினால் மகிந்த வீட்டை விட்டு வெளியேறுவார்! நாமல் திட்டவட்டம்

Dsa
0

 



வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மகிந்த ராஜபக்ச வீட்டை விட்டு வெளியேறுவார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.


சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம்(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


குரங்குகள் மீது வெறுப்பு


இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தேங்காய் தட்டுப்பாட்டுக்குக்கும், மின்விநியோக துண்டிப்புக்கும் குரங்குகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. குரங்குகள் மீது இந்த அரசாங்கத்துக்கு ஏன் இந்தளவுக்கு வெறுப்பு என்பது தெரியவில்லை.


மின்சாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற கூற்று அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் மக்கள் மத்தியில் பொய்யுரைத்ததை போன்று தற்போது பொய்யுரைக்காமல் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top