கடந்த 2024 ஆகஸ்ட் 03 ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் 2025 ஜனவரி 16,17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேர்முகப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை (15) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை நடாத்த வேண்டுமென இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மற்றும் ஏனைய அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
