தில்சாத் பர்வீஸ் - சம்மாந்துறை
சிறுவர்களின் உள வளத்தை செழிப்புறச் செய்வதற்கும் பொழுதுபோக்கு மேம்பாட்டுக்காகவும் சம்மாந்துறை பிரதேச சபையினால் சுமார் 31 மில்லியன் ரூபாய் செலவில் ஆழையடி பொதுச் சந்தையில் அமைக்கப்பட்ட சிறுவர் பொழுதுபோக்கு பூங்காவை சிறுவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நேற்று (09) இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். எல்.ஏ.கமல் நெத்மினி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அம்பாறை மாவட்டத்தில் முதல் முறையாக மூடிய அரங்கில் அமையப்பெற்ற இப்பூங்காவில் புகையிரதம் மற்றும் கார் சவாரி உள்வாங்க பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.
இத்திட்டத்திற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீட்டின் உள்ளூர் அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் 31 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன் போது பசுமை பூங்காவாக மிளிரச் செய்யும் வகையில் அதிதிகளால் மர நடுகையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் சட்டத்தரணியுமான றிஸாட் எம் புஹாரி,கட்டிட திணைக்களத்தின் கல்முனை பிராந்திய பிரதம பொறியாளர் பி. அச்சுதன், சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் தலைவரும் முன்னாள் அரசாங்க அதிபருமான ஐ.எம் ஹனிபா, மஜிலிஸ் அஸ்ஸுரா நிர்வாக செயலாளர் எம்.எல்.எச். ஜெளபர், ஆய்வு உத்தியோகத்தர்,சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து சிரப்பித்தனர்..







