மக்கள் அவதானம்...!!
சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக இது வரும் அடை மழை காரணமாக நேற்று 12.01.2025 மாலை வரை இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் 102/110 அடியை எட்டியுள்ளது.
இதனால் அனேகமாக இன்று 13.01.2025 பிற்பகலுக்குள்ளாகவே தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுமார் 3 மதகுகள் - வான் கதவுகள் திறக்கப்பட நேரிடலாம் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
எனவே மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இணக்கப்பாட்டுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

