நூறு ரூபாய் திருடிய மகனுக்கு சூடு வைத்த தந்தை

Dsa
0

 



தனது மகன் நூறு ரூபாய் பணத்தை திருடிய குற்றத்திற்காக தந்தையினால் கையில் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவு மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் 03 இல் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் பக்கட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்து செலவளித்தார் என்ற குற்றத்திற்காக தகப்பனால் கடந்த திங்கட் கிழமை (15) இக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் அறிய வருவதாவது, தனது சட்டைப் பக்கட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தில் 100 ரூபா குறைந்துள்ளதை கண்டறிந்த தந்தை தனது மகனிடம் "எனது சேட் பக்கட்டிலிருந்து பணம் எடுத்தாயா?" என்று கேட்கவும், அதற்கு மகன் "ஆம்" என்று பதிலளித்ததுடன் "நான் அதனை எடுத்து செலவளித்து விட்டேன்" என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து தந்தையான குறித்த நபர் தனது மகனுக்கு கையில் சூடு வைத்துள்ளார்.


அடுத்த நாள் மகனை பாடசாலைக்கு செல்லுமாறு கூறியதையடுத்து, "எனக்கு கை கடுமையாக வலிக்கிறது. பாடசாலைக்கு செல்ல முடியாதுள்ளது" என்றும் மகன் கூறியுள்ளார்.


இதனையடுத்து,  "இன்று பாடசாலைக்குச் செல்லாவிட்டால் மீண்டும் சூடு வைப்பேன்" என தந்தை பயமுறுத்தியதை தொடர்ந்து பயம் காரணமாக குறித்த சிறுவனும் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளான்.


நேற்று செவ்வாய்க்கிழமை (16) பாடசாலையில் மாணவன் சோகமாக இருப்பதை கண்ணுற்ற  வகுப்பாசிரியர் குறித்த மாணவனை தனக்கு அருகில் வரவழைத்து நடந்த விடயம் தொடர்பில் விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தனது வகுப்பாசிரியரிடம் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, குறித்த விவகாரம் பாடசாலை நிருவாகத்தினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, பாடசாலை நிருவாகத்தால் அடுத்த கட்டமாக குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு முறையிடப்பட்டது.



குறித்த பாடசாலைக்கு விரைந்த நன்னடத்தைப் பிரிவினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸாரும் பாடசாலைக்கு விரைந்து சம்பவம் தொடர்பில் விபரங்களை கேட்டறிந்தனர்.



இதனை தொடர்ந்து மாணவனின் தந்தை கைது செயயப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தற்போது குறித்த மாணவனின் தந்தை  வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top