இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன (ஜோன்டி) என்பவர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
நேற்று மாலை (16) அம்பலாங்கொடை கந்தேவத்த பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு முன்னால் வைத்தே குறித்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
