இறக்காமம் பிரதேசத்தில் வரமாக கிடைத்த எரிபொருள் நிரப்பு நிலையம்.சில சதிகாரர் களின் முயற்சிகளினால் கைநழிவிப்போகும் அபாயம்.



இறக்காமம் பிரதே சபைக்கு உலக  வங்கியினால் 5 கோடிக்கு அதிகமான பணம் கிடைத்துள்ளது .




#இந்தப் பணத்தினை மக்களுக்கு     பயன ளிக்கக்கூடிய  பிரதேச சபைக்கு வருமானம் கிடைக்கக்கூடிய செய்த்திட்டமாக இந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தினால் பிரதேச சபை செயலாளர் பணிக்கப் பட்டுள்ளது.


 *ஆனால் இவ்விடயம் பொதுமக்களுக்கு இதுவரையும் தெரியாது. தெரியப்படுத்தவுமில்லை.


*இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபை செயலாளர் பிரதேச செயலாளர் ஆகியோரை சந்தித்து இறக்காமம் ஜூம்மா பள்ளிவாசல் இறக்கமம் மக்களின் நீண்ட கால தேவையான எரிபொருள் நிரப்பும் ஒன்றை ஏற்படுத்துமாறு கூட்டாக கோரிக்கை விடுத்தது .


*அதனை ஏற்றுக் கொண்ட பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர் ஆகியோர் அதற்கான அரச காணியை தெரி செய்வதற்கு கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.



*அதன்பின் பொருத்தமான இடங்கள் மூன்றினை இறக்காமம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் சிபாரிசு செய்து  கொடுத்தது. 


 *இவ் விடயத்தில் ஜும்மா பள்ளிவாசல் கடும் முயற்சிகளை செய்ததை அறியக்கூடியதாக இருந்தது.

 *எரிபொருள் நிரப்பு நிலையும் நிறுவ வேண்டும் என்றுபிரதேச சபை செயலாளர் அவர்களினால் பள்ளிவாசலில் உறுதி அளிக்கப்பட்டது.


* இதற்குப் பிறகு  அண்மையில்.

கலைக்கப்பட்ட அதிகாரம் அற்ற பிரதேச உறுப்பினர்களை அழைத்து பிரதேச சபைச் செயலாளர் கலந்துரையாடல் நடத்ததினார்.

இதன்பின் எரிபொருள்நிரப்பு நிலையம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு கலைக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்களால் பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதது.


 *அத்துடன் பஸ் வாங்குதல்

"*சோளர்  அடித்தல்"

(சூரிய மின்கலம்) 


ஆகிய வேலை திட்டங்களை பிரதேச சபை செயலாரிடம்   கூறினார்கள்.


 இவ்விடயம் பொதுமக்கள் மத்தியில் பாரி ஆத்திரத்தையும் எதிர்ப்பலையினையும் தோற்றுவித்தது.


*மக்களுக்கு எதிரான விடையங்களில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் . ஈடுபடுகிறார்கள் என்ற விடயம் தற்போது மக்களுக்கு தெரிந்துள்ளது.

 

*இவ்விடயம் நலன் விரும்பிகள் மத்தியில் பாரிய ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனவே பள்ளிவாசலில்  வைத்துஎ ரிபொருள் நிரப்புநிலையும் ஒன்று ஏற்படுத்தித் தருவது என்று உறுதி அளித்த பிரதேச சபை செயலாளர் அவர்கள்

இப்போதுஅதிகாரமற்ற உறுப்பினர்களின் கதையைக் கேட்டு மௌனமாக இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 இத்திட்டத்தை சதி செய்து வேறு பக்கம் திசைதிருப்பதற்கு சமூகத்தில் பல சதிகாரர்கள் உருவெடுத்துள்ளார்கள் செயலாளர் அவர்களை பலர் பிழையாக வழிப்படுத்துகின்றனர்.

இது விடயமாக பல அமைப்புக்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.

எனவே மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஏற்படுத்துவதற்கு ப செயலாளர் நடவடிக்கை எடுக்குமாறும்

இறக்காமம் ஜூம்மா பள்ளிவாசல்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான ஒரு குழுவை நியமிக்கு மாறும் கேட்டுக்கொள்கின்றோம்

 இந்த விடயம் தொடர்பாக எமது பிரதேசத்திற்கு இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பொருத்தமானதா அல்லதா என்று மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

நலன் விரும்பி

தேச மானிய தேச கீர்த்தி 

எஸ்.எம்.சன்சீர்

ஊடகவியலாளர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section