ஓர் அழகிய செயல் ஆயிரம் சொற்களை விட மேலானது!

Dsa
0

 



கலாநிதி. றவூப் ஸெய்ன் 


இன்று இஸ்லாம் பலருக்கும் அறிஞர்கள் அல்லது புத்துஜீவிகள் என்று தம்மை விளம்பரம் செய்பவர்களுக்கும் இன்னும் சில முகநூல் காய்ச்சல் காரர்களுக்கும் ஒரு விவாதப்பொருள் மட்டுமே. அவர்களுக்கு அது வெறும் அறிதல் மூலம். கோட்பாட்டுத்தத்துவம், தத்துவக்கோட்பாடு. இத்துறையில் எனக்கு ஆழமான அறிவுள்ளது எனக்காண்பிப்பதற்கான ஒரு தளம் அவ்வளவுதான்.  


இன்று குர்ஆன் விளக்கவுரையாளர்கள் மலிந்து விட்டனர். ஆனால் அவர்கள் குர்ஆனை தமது வாழ்வில் ஓதுகிறார்களா என்று தெரியவில்லை. ஸகாத் பற்றி ஆய்வு செய்பவர்கள் பிச்சைக்காரர்களுக்கு பத்து ரூபா கொடுக்கிறார்களா என்பது சந்தேகமே. இஸ்லாமிய ஆடை அணிந்திருப்பதாக எண்ணும் பலர் தமது மனைவியுடனும் குழந்தைகளுடனும் இங்கிதமாகப்பேசத்தெரியாதவர்கள் என்று முறைப்பாடு செய்யப்படுகின்றது. பயான்களில் அடுத்தவர்களை அழவைப்பவர்கள் தாம் தனிமையிலிருந்து ஒரு நாள் அல்லாஹ்வை எண்ணி அழுதிருப்பார்களா?

 

குழந்தை வளர்ப்பு பற்றி பேசித்திரிபவர்கள் தமது குழந்தைகளை முறையாக வளர்க்கின்றனரா என்று கேட்கத் தோன்றுகிறது. இஸ்லாம் செயலில் தான் இருக்க வேண்டும். சொல்லில் அல்ல. சட்டங்களைப்படிப்பதை விட பண்பாடுகளை நமது வாழ்வில் கடைப்பிடிப்பதே மேல். எப்போதும் மார்க்கத்திலுள்ள சலுகைகளுக்காக ஏங்குவதை விட நாம் பேணுதலில் கவனம் குவிப்பது மேல். அடுத்தவரின் மனங்களைப்புண்படுத்துவதை விட அவர்களை மனம் குளிரச்செயவது மேல். ஆயிரம் சொற்களை விட ஒரு அழகிய செயல் மேலானது!

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top