பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும்!

0

ஆட்சியாளர்களுக்கு ஜனாதிபதி மாளிகையும் அலரி மாளிகையும் உரித்தாகியுள்ளது.இந்த இரண்டு மாளிகைகளும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சர்வதேச மட்டத்தை எட்டும் மிக உயர்ந்த மாதிரியிலான தகவல் தொழிநுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்கப்படும்.ஆட்சியாளர்களுக்கு மாளிகைகள் தேவையில்லை.இந்நாட்டின் பிள்ளைகளுக்கும் பொது மக்களுக்குமே மாளிகைகள் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டில் ஏழை எழிய பெற்றோரின் பிள்ளைகள் இருந்தாலும்,இப்பிள்ளைகள் அறிவு,திறன் மற்றும் ஆற்றல் நிரப்பப் பெற்ற வளம் கொழிப்போராக உள்ளனர்.சர்வதேச தரத்திலான உயர்தரக் கல்வியைப் பெறுவது நாட்டின் மாணவச் செல்வங்களது உரிமையாகும்.இந்தக் கடமையை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஆனால் வங்குரோத்து நாட்டில் ஆட்சி செய்பவர்களும் திருடும் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அரசின் சொத்துக்களையும் வளங்களையும் சூறையாடுகின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த பொருளாதார பயங்கரவாதிகளும் கொலையாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அவர்கள் நாட்டிலிருந்து கொள்ளையடித்த பணம் மீளக் கொண்டுவரப்பட்டு,இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு நாட்டின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படும்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 88 ஆவது கட்டமாக,

அனுராதபுரம்,ராஜாங்கனை யாய 13/14 மஹசென் தேசியப் பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு கூட நிறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் குடிமகன் அறிவு,கல்வி,ஞானம்  ஆகியவற்றின் காரணமாகவே ஒரு நல்ல உலகளாவிய குடிமகனாக மாறுகிறான்.இதை வளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாக அமைய வேண்டும்.இதனை சாத்தியப்படுத்த எடுக்க முடியுமான சிறந்த நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எத்தகைய தடைகள்,சவால்கள், பிரச்சினைகள் வந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தப் பயணம் நிறுத்தப்படாது. எமது நோக்கமும் பயணமும் தூய்மையானது. 41 இலட்சம் மாவணச் செல்வங்களையும் உலகளாவிய ஸ்மார்ட் குடிமக்களாக மாற்றுவதே பிரபஞ்ச வேலைத்திட்டத்தின் ஒரே குறிக்கோள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.  

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top