செய்தி தலைப்பு - அம்பாறையில் 100 இற்கும் மேற்பட்ட யானைகளின் அட்டகாசம்

0


 யானை கூட்டம் ஒன்று வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புற்களை உண்பதற்காக நாடி வருகின்றன.


அம்பாறை மாவட்டத்தில் இன்று (28) காலை மதியம் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு வருகை தந்துள்ளன.

இதன் போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது. இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 இற்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன.

தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன் இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

- அம்பாறை நிருபர் ஷிஹான் -





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top