மருதானை பாலத்திற்க்கு அருகாமையில் சடலம் ஒன்று மீட்ப்பு

0


 மருதானை ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நேற்று (29) காலை குறித்த பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கீழே விழுந்த நபரை விசாரணை அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 30 வயதுடைய 5 அடி 8 அங்குல உயரமும், மெலிந்த உடலும், குறைவான தலைமுடியும், தாடியும் வளர்த்து, ஊதா நிற மேற்சட்டையும் மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top