கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் U.L. நசார் அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று முன்னாள் முதல்வரூம் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து இப் பாடசாலையின் தேவைகளை கேட்டரிந்ததுடன் தான் ஆரம்பக்கல்வி கற்ற இப்பாடசாலைக்கு தன்னால் முடியுமான உதவிகளைச் செய்து தருவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது அதிபர் U.L. நசார் சேர் அவர்களினால் பாடசாலை தேவைகள் அடங்கிய மகஜரும் முன்னாள் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , முதல்வரின் இனைப்புச் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- ஊடகப்பிரிவு -







