இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக தொழினுட்ப பிரிவு மாணவர்களினால் தொழினுட்பத்துடனான உணவு உற்பத்தி முறை சம்மந்தமான வழிகாட்டல் பயிற்சி

0


இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக தொழினுட்ப பிரிவு  மாணவர்களினால் ( Faculty of Technology, Department of Bio System Technology, South Eastern University of Sri Lanka) வினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான உணவு உற்பத்தி முறை சம்மந்தமான செய்து காட்டல் வழிகாட்டல் பயிற்சி நிகழ்வானது இன்று இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அதன் தலைவர் மதிப்பிற்குரிய வைத்தியர் றஷ்கா ஆஸ்மி அவர்களின் தலைமையில் விவசாயப் பேதனாசிரியர்களான   S.A.L. பஹ்மி அஹமட், மற்றும் S.A.முகம்மது அஸ்ஹர் அவர்கள் இருவரினதும் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது.



இந்நிகழ்வில்  தென்கிழக்கு பல்கலைக்கழக விடயத்திற்கு பொறுப்பான விரிவுரையாளரும் பேராசிரியருமபன திரு Dr. அத்தபத்து, மற்றும் மேலும்பலர் கலந்து கொண்ட  நிகழ்வில்  தாய்மார்கள், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு செயன் முறை தொழினுட்பத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்விலே இறக்காமம் தேசிய பாடசாலை, அல் அமீன் வரிப்பதான் சேனை உயர்தர தொழினுட்பப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் பங்கு கொண்டு பூரண பயன் பெற்றது குறிப்பிடத்தக்கது.







Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top