விகாரையின் நிர்மாணப் பணிக்கான அனுமதி மறுப்பு!

0

 


அபு அலா - 


திருகோணமலை - நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரிய ஆர்ப்பாட்டம் இன்று (28) திருமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு ஈடுபட்டவர்களுக்கு விளக்கமளிக்கும் கலரந்துரையாடல் அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றபோது, குறித்த விகாரையை நிர்மாணிப்பதால் ஏற்படும் பிரச்சினை குறித்து தெளிவான விளக்கத்தை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு ஆளுநர் தெளிவு படுத்தியதுடன் அதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. 


திருக்கோணமலை மாவட்டத்தில் அனைத்து இன மக்களும் வாழும் ஒரு மாவட்டமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என்றும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.


பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாஅதனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். 


திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்ட காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top